வடக்கு கலிபோர்னியாவின் தாஹோ ஏரி கரையில் இருந்து பெரும் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
கால்டோர் தீயால் ஏற்கனவே ஒரு லட்சத்து 91 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எரிந்துவிட்டது. இந்நிலையில் வெறும் 16 வீதமேயான தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த தீயை அணைக்க 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அங்குள்ள நோயாளிகள் இப்பகுதியில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த தீயால் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட சொத்துக்கள் சேதமடைந்திருக்கலாம் அல்லது அழிவடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் வெப்பமான மற்றும் வறண்ட நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் வெப்பநிலை அதிகரித்து காட்டுது தீ ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
தொழில்துறை சகாப்தம் தொடங்கியதிலிருந்து உலகம் ஏற்கனவே சுமார் 1.2C வெப்பமடைந்துள்ளது. இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிடின், வெப்பநிலை உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்ல இன்னும் வாய்ப்புக்கள் அதிகம் என சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment