பஸ்ஸில் தீ! – குழந்தைகள் உட்பட 21 பேர் பலி

1775903 pakistan

பாகிஸ்தானின் நூரியா பாத் பகுதியில் நள்ளிரவு பயணம் செய்த பஸ் திடீரென தீப்பிடித்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த குறித்த பஸ் முழுதும் தீ வேகமாக பஸ் முழுவதும் பரவியது. பயணிகள் சிலர் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து கீழே குதித்து தப்பினர்.

ஆனால் பஸ் உள்ளே சிக்கி கொண்ட குழந்தைகள் உள்பட 21 பேர் தீயில் கருகி பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்ஸில் பிடித்த தீயை அணைத்தனர். பஸ்ஸில் இருந்த குளிர்சாதன பகுதியில் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீப்பிடித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்கள்.

சமீபத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு கராச்சியில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ள பாதிப்பு குறைந்ததால் கராச்சியில் இருந்து சைர்பூர் நாரன் ஷா பகுதிக்கு மக்கள் பஸ்ஸில் சென்ற போது விபத்தில் சிக்கினர். பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

Exit mobile version