tamilni 393 scaled
உலகம்செய்திகள்

கார் மற்றும் டிராக்டர் மீது பேருந்து மோதி அதிபயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

Share

கார் மற்றும் டிராக்டர் மீது பேருந்து மோதி அதிபயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்று கார் மற்றும் டிராக்டர் மீது மோதிய விபத்தில், 6 பேர் உடல்நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அதிகாலையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

2.30 மணியளவில் கல்யாண் சாலையில் கரும்பு ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் ஒன்று கவிழ்ந்தது.

இதனால் மற்றொரு டிராக்டர் கொண்டு வரப்பட்டு அதிலிருந்த கரும்புகள் அந்த வாகனத்திற்கு மாற்றப்பட்டது.

அச்சமயம் காரில் வந்த நபர் கரும்புகளை இறக்கும் பணிக்கு உதவியுள்ளார். அப்போது டிராக்டர் திரும்பியபோது அரசு பேருந்து அதன் மீதும், கார் மீதும் மோதி பயங்கர விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அவர்கள் உதவினர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், ‘டிராக்டர் சாலையில் திரும்பியபோது, அங்கு வந்த அரசுப் போக்குவரத்து பேருந்து டிராக்டர் மற்றும் கார் மீது மோதியது. சில தொழிலாளர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்’ என தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...