rtjy 3 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை யுத்த குற்றவாளிகளை தடைசெய்வது தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்

Share

இலங்கை யுத்த குற்றவாளிகளை தடைசெய்வது தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்

இனப்படுகொலைக்கு காரணமான இலங்கைப் போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது பற்றி கலந்துரையாட பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 05.12.2023 மாலை 2.30 மணிமுதல் 90 நிமிடங்களுக்கு நாடாளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கத்தில் (Westminster Hall) நடைபெறவுள்ளது.

இலங்கை முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரத்தின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த 2020 காலப்பகுதியில் இருந்து ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன.

அத்துடன் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோரும் சித்தரவதையால் பாதிக்கப்பட்டோரும் ஒன்றிணைந்து சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் பல்வேறு வழிகளில் இப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 2021 இல் சர்வதேச மனித உரிமை அமைப்பான ITJP சவேந்திர சில்வாவின் யுத்தக்குற்றங்களிற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றினை பிரித்தானிய அரசிடம் சமர்ப்பித்து அவரை தடை செய்யும்படி கோரியிருந்தது.

இது போல மே மற்றும் யூன் 2021 இல் ICPPG இலங்கையில் 2019 முதல் 2021 வரை சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 200 இற்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து தொடரும் சித்திரவதைகளிற்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசினால் தடை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் முயற்சியில், பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆகியோர் ஒருங்கிணைக்கப்பட்டு, தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உயர்மட்ட அரசில் தலைவர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் இராஜதந்திர சந்தப்புக்களை நடாத்தி, இந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு தேடி வருவதுடன், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அழுத்தம் வழங்கும் படி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த முயற்சியில் பிரித்தானிய பழமைவாத கட்சிக்கான தமிழர்கள் (BTC), தொழில்கட்சிக்கான தமிழர்கள் (TFL), Sri Lanka Campain மற்றும் Redress ஆகிய அமைப்புக்களும் இணைந்து கொண்டன.

இந்த அடிப்படையில் இதுவரை 600க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்ளை தொடர்பு கொண்டுள்ளதுடன், 60க்கு மேற்பட்ட சந்திப்புக்களையும் நடத்தியுள்ளனர்.

இதேவேளை கடந்த 18 மே 2021 அன்று பிரித்தானிய நாடாளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் (Hon. McLaughlin Anne) இலங்கை முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (GSR) தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதியான நிலைப்பாட்டை முன்னிறுத்த வேண்டுமென்பதை உள்ளடக்கிய முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இதுவரை 30 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.

இவர்களின் இடைவிடாத முயற்சியின் விளைவாக பல பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடை செய்யுமாறு பகிரங்கமாக கோரிக்கை விடுத்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய காணொளி ஒன்றும் அண்மையில் வெளிவிடப்பட்டது.

இந்த அயராத முயற்சியின் அடுத்த கட்ட முன்னேற்றமாக, தற்போது தமிழருக்கான பிரித்தானிய அனைத்துகட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPGT) தலைவரான மதிப்பிற்குரிய எலியட் கொல்பேர்ண் (Hon. Elliot Colburn MP) அவர்களின் உதவியுடன், BTC மற்றும் TFL அமைப்புக்களால் இந்த முக்கிய நாடாளுமன்ற விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய 10 Dec 2023 அன்று பிரித்தானியா தனது புதிய தடைப்பட்டியலை அறிவிக்க உள்ள நிலையில் இந்த நாடாளுமன்ற விவாதம் மிகமுக்கிய மாற்றத்தை கொண்டுவரக்கூடியது என்றும், இதனால் இந்த அரிய சந்தர்ப்பத்தை ஈழத்தமிழர்கள் தவறவிடக்கூடாது என்றும் ICPPG தெரிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தமது பகுதி நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்புகொண்டு, இந்த விவாதத்தில் கலந்து கொண்டு இலங்கை யுத்த குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துமாறும் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்கான மாதிரி கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அனைவரும் தயவுசெய்து அவசரமாக இந்த கடிதத்தை அல்லது இதுபோன்ற கடிதம் ஒன்றை அவரவர் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி உதவுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...