skynews suella braverman police 6265525 jpg
உலகம்செய்திகள்

பிரித்தானிய உள்துறைச் செயலருக்கு பொலிசார் எச்சரிக்கை

Share

பிரித்தானிய உள்துறைச் செயலருக்கு பொலிசார் எச்சரிக்கை

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறும் ஒவ்வொரு திருட்டையும் பொலிசார் விசாரணை செய்தாகவேண்டும் என பிரித்தானிய உள்துறைச் செயலர் அறிவித்திருந்தார்.

பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், கடைகளில் திருடுவது, சேதப்படுத்துவது, மொபைல் திருட்டு அல்லது கார் திருட்டு ஆகிய குற்றச்செயல்களை பொலிசார் முக்கியத்துவம் குறைந்தவையாக கருதுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியிருந்தார்.

ஆகவே, குற்றச்செயல் எத்தகையதாயினும் அது குறித்து பொலிசார் விசாரணை செய்தாகவேண்டும் என சுவெல்லா அறிவித்திருந்தார்.

சுவெல்லாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. தேசிய பொலிஸ் துறைத் தலைவர்கள் கவுன்சிலின் (The National Police Chiefs’ Council, NPCC) தலைவரான Gavin Stephens, அந்த அறிவிப்பு தொடர்பில் சுவெல்லாவுக்கும், பொலிஸ் துறை அமைச்சரான Chris Philpக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், பொலிஸ் துறைக்கு அழுத்தம் கொடுப்பது, மொத்தத்தில் குற்றவியல் நீதி அமைப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இணைந்து செயல்படவேண்டிய வியங்கள் பல உள்ளன என்றும் எச்சரித்துள்ளார் அவர்.

இன்னும் பொலிஸ் துறையில் பெருமளவில் பொலிசார் பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்துள்ள Gavin, ஆகவே, சுதந்திரமாக செயல்பட பொலிஸ் துறைத் தலைவர்களை அனுமதிப்பதும் எந்த குற்றச்செயல்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே விடுவதும் சரியே என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...