4 6
உலகம்செய்திகள்

வரலாற்றில் முதற் தடவையாக பிரிட்டன் உளவு அமைப்புக்கு பெண் தலைவர் நியமனம்

Share

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் உளவு அமைப்பான “எம்.ஐ.6 (MI6) “இன் தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த எம்.ஐ.6 உளவு அமைப்பின் தலைவர் பதவியை, ‘சி’ என்று குறிப்பிடுவர். இந்தப் பதவியில் உள்ளவர் பெயர் மட்டுமே வெளியுலகுக்கு தெரியும்.

ஆனால், அந்த அமைப்பின் மற்ற பதவிகளில் உள்ளவர்கள் பெயர்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள சர் ரிச்சர்ட் மூரே (Sir Richard Moore), விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், உளவு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள 47 வயதான பிளேசி மெட்ரவெலி (Blaise Metreweli) புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

‘எம்.ஐ.,6’-உளவு அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில், பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இவர் இதற்கு முன்னர் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் எம்.ஐ.- 5 உளவு அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள பிளேசி மெட்ரவெலி, கடந்த 1999 முதல் உளவு அமைப்பில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....