சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பிரித்தானிய இளம்பெண்
இத்தாலிக்கு சுற்றுலா சென்று இருந்த பிரித்தானிய இளம்பெண் சூசன்னா போடி சைக்கிள் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயங்களால் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த சூசன்னா போடி(Susannah Boddie, 27) என்ற இளம் பெண் ஒருவர், இத்தாலியின் கார்டா ஏரிக்கு அருகில் உள்ள நவாஸ்ஸோ டி கார்க்னானோ(Navazzo di Gargnano) என்ற மலை உச்சியில் இருந்து சைக்கிளில் கீழே இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்டார்.
வெள்ளிக்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பிரித்தானிய இளம்பெண் சூசன்னா போடி துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் தலைக்கவசம் அணிந்து இருந்தும் உயிர் பறிக்கும் அளவிற்கு காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது, அத்துடன் இந்த சம்பவத்தின் போது இளம் பெண்ணின் துணைவர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னுடைய துணைவி சூசன்னா போடி கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்படுவதை பார்த்த நபர், அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஜோடி இன்னும் சில தினங்களில் இத்தாலியை விட்டு புறப்பட திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக இத்தாலி பொலிஸ் செய்தி தொடர்பாளர் பேசிய போது, இருவரும் அனுபவம் பெற்ற சைக்கிள் ஓட்டுபவராக இருந்தும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த சம்பவம் தொடர்பான சூழலை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment