24 662ec1c7d65f2
உலகம்செய்திகள்

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிகள்

Share

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிகள்

கடந்த ஆண்டுகளை விடவும் பிரித்தானியாவில் இவ்வருடம்(2024) சிறிய படகுகள் மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

அதன் படி, இந்த நான்கு மாதங்களில் மாத்திரம் பிரித்தானியாவிற்குள் ஆபத்தான முறையில் படகுகளின் மூலம் 7,167 க்கும் மேற்பட்டவர்கள் இங்கிலீஷ் கால்வாயை கடந்து குடியேறியுள்ளனர்.

அத்தோடு, கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு படகு மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் குடியேறுபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டம் ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரிசி சுனக் தெரிவித்திருந்தார்.

அதன்போது, பிரதமர் ரிசி சுனக், குடியேற விரும்புபவர்கள் அதிகமாக சட்டவிரோதமாகவே பிரித்தானியவிற்கு நுழைய விரும்புகிறார்கள் என்றும் அவர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது அறிந்திருப்பதால் இந்த திட்டம் பயனுள்ளதாகவிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...