கடும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கனடாவில் முடங்கியுள்ளது.
கனடா- ரொரன்டோவில் கடும் பனிப்புயல் வீசியமையால் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் வீதியெங்கும் பனி கொட்டிக் கிடக்கிறது.
அத்துடன் விமான போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. திடீரென உருவான பனிப்புயலால் வழக்கத்தை விட அதிகளவு பனி கொட்டியதாக ரொரன்ரோ மேயர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பனிப்புயல் தாக்கம் குறைந்த பின்னர் சாலைகளில் கொட்டிக் கிடந்த பனிக்குவியல்கள் அகற்றப்பட்டன. அருவி ஒன்றும் பனிக்கட்டியாகி உருமாறி காணப்பட்டது.
இதற்கிடையில் இந்த பனிகுவியலில் நாய் ஒன்று மகிழ்ச்சியுடன் துள்ளும் காணொளியும் வைரலாகியுள்ளது.
#WorldNews
Leave a comment