சர்ச்சையில் சிக்கிய பில் கேட்ஸ்!
நேர்காணலில் பெண்களிடம் உடலுறவு, ஆபாச படம் குறித்து கேட்ட கேள்வியால் பில் கேட்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
உலகில் பணக்காரணப் பட்டியலில் இடம் பிடித்தவர் பில் கேட்ஸ். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இவர் பிரபலம். பல சமூக சேவைகளையும் பில்கேட்ஸ் செய்து வருகிறார். இப்படி பணக்காரராக வலம் வரும் பில்கேட்ஸ் சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
தற்போது நடைபெற்ற சம்பவத்தில் பெரும் சர்ச்சையில் தற்போது பில்கேட்ஸ் மாட்டிக் கொண்டிருக்கிறார். அது என்னவென்றால், பில் கேட்ஸ் நிறுவனத்தில் பலர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக நடந்த நேர்காணலில் பெண்களிடம் வெளிப்படையாகவே பாலியல் மற்றும் உடலுறவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போதைப் பொருள் பயன்படுத்துகிறீர்களா? திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளீர்களா? எந்த டைப் ஆபாசப் படங்கள் பிடிக்கும்? உங்கள் செல்போனில் நிர்வாண புகைப்படங்கள் இருக்கிறதா? காசுக்காக டான்ஸ் ஆடியுள்ளனரா? என்றெல்லாம் கேள்வி கேட்கப்பட்டுள்ளதாம்.
இன்னும் சிலரிடம் பாலியல் உறவால் பரவும் நோய் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டுள்ளது இதில் கொடுமை என்னவென்றால், பாதுகாப்பு நிறுவனம் ஒன்றுதான் இந்த நேர்காணலை நடத்தியுள்ளது. ஆனால், ஆண்களிடம் இதுபோன்ற கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லையாம். ஒரு சிலரிடம் மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாம்.
இது குறித்து பில் கேட்ஸ் அலுவலக செய்தித் தொடர்பாளர்கள் பேசுகையில், இதுபோல் கேள்விகள் கேட்கப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த கேள்விகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். புகார் உறுதியானால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த நேர்காணலுக்கும், பில் கேட்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பெரும் சர்ச்சையில் பில் கேட்ஸ் சிக்கியுள்ளார்.
Leave a comment