tamilnig 2 scaled
உலகம்செய்திகள்

ஹவுதி கிளர்ச்சியாளர் மீது தாக்குதல் : அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

Share

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது நிறுத்தப்படாவிட்டால் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கடலில் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களால் செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்து பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதனிடையே, ஹவுதி கிளர்ச்சியாளர்களை தாக்குவதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அந்நாட்டு காங்கிரஸின் அனுமதியை கோரவில்லை.

இதனால் ஜோ பைடன் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச மோதல்களின் போது மேற்கொள்ளப்படும் இராணுவத் தலையீட்டிற்கு காங்கிரஸின் அனுமதி அவசியம் என கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பலான USS Carney நேற்று (13.1.2024) காலை யேமனின் ரேடார் கட்டமைப்பை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது.

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கூட்டு இராணுவத்தினர் தற்போது ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து 30 க்கும் அதிக தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்நிலையில், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹவுத்தி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை பிரேரணை ஒன்றை நிறைவேற்றி வலியுறுத்தியுள்ளது.

உலகின் கடல் வணிகத்தில் பிரதான வழித்தடமான செங்கடல் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெறுவதால், நாடுகள் பல பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இதனால், செங்கடலில் ஹவுத்தி கிளா்ச்சியாளா்களிடமிருந்து சரக்குக் கப்பல்களை பாதுகாப்பதற்காக இலங்கை, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூா் போன்ற நாடுகளும் தங்களது போா்க் கப்பல்களை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...