85737634
உலகம்செய்திகள்

போராட்டங்களில் பங்கெடுக்க அகதிகளுக்கு தடை!

Share

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதையடுத்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

தலிபான்கள் எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை தொடர்ந்து ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். இதிலும் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த 2 நாடுகளிலும் நடந்து வரும் போராட்டங்களால் அங்கு வசித்து வரும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

ஈரான் மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் போராட்டங்கள் அந்நாட்டு பிரச்சினை. இதனால் ஆப்கானிஸ்தானியர் யாரும் இதில் பங்கேற்க கூடாது என்று தலிபான் துணை மந்திரி அப்துல் ரகுமான் ரசித் தெரிவித்து உள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...