8 28 scaled
உலகம்

2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பாபா வங்காவின் கணிப்புகள்: முரண்பட்ட கருத்துக்களைக் கூறும் மக்கள்

Share

2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பாபா வங்காவின் கணிப்புகள்: முரண்பட்ட கருத்துக்களைக் கூறும் மக்கள்

பல்கேரியாவில் பிறந்தவரான பாபா வங்கா, எதிர்காலம் குறித்த பல விடயங்களை கணித்துள்ளார். அவற்றில் பிரெக்சிட், இளவரசி டயானாவி ன் மரணம், சோவியத் யூனியனின் சிதைவு மற்றும் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் என 85 சதவிகித கணிப்புகள் சரியாக நிறைவேறின.

ஆனால், அவரது கணிப்புகளில் சில தவறாயும் போயுள்ளன. 2016ஆம் ஆண்டில், ஒபாமாதான் அமெரிக்காவின் கடைசி ஜனாதிபதியாக இருப்பார் என்றும், 2010இல் மூன்றாம் உலகப்போர் துவங்கும் என்றும் கணித்திருந்தார் அவர். ஆனால், அவை பலிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என பாபா கணித்த விடயங்கள் குறித்த செய்திகள் இப்போதே வெளியாகிவருகின்றன.

5079ஆம் ஆண்டு வரை உலகம் அழியாது என்று கூறியுள்ள பாபா, ஆனால், 2025ஆம் ஆண்டு, பூமியின் அழிவு துவங்குவதில் முக்கிய பங்காற்றும் என்று கூறியுள்ளார்.

ஆண்டின் இறுதிவாக்கில் மிகப்பெரிய அளவிலான வானியல் நிகழ்வு ஒன்று நிகழ இருப்பதாகவும், 2025இல் ஐரோப்பாவில் ஒரு பெரும் மோதல் வெடிக்கும் என்றும், அதனால் மக்கள்தொகை பெருமளவில் குறைந்துவிடும் என்றும் பாபா கணித்துள்ளார்.

பாபாவின் கணிப்புகளை நம்புவர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே நேரத்தில், அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர் ஆண்டுதோறும் இப்படித்தான் சொல்கிறார். ஒருவேளை, அவர் மக்கள் கவனம் ஈர்ப்பதற்காக அப்படி செய்யக்கூடும் என்னும் ரீதியிலும் சமூக ஊடகங்களில் சிலர் பாபாவைக் குறித்து விமர்சித்துவருகிறார்கள்.

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...