தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் (28) இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 116 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இம் மோதலில் குறைந்தது 5 பேருடைய தலை துண்டிக்கப்பட்டும் ஏனையவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் 400 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈக்குவடோர் வரலாற்றில் மிகவும் மோசமான சிறைச்சாலை படுகொலை என அதிகாரிகள் இந்த கலவரத்தினை விபரித்துள்ளனர்.
பல குற்றச்சாட்டுக்களின் கீழ்க் கைதாகி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட கைதிகள் இரு குழுக்களாக பிரிந்து நேற்றுமுன்தினம் (28) மோதலில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
.
Leave a comment