25 6846f44e4fa83
உலகம்செய்திகள்

நாடு திரும்பும் அகதிகளுக்கான உதவி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை: சந்தோஷ் ஜா

Share

இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கான இருப்பிட மற்றும் வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது அண்மையில் தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்து நாடு திரும்பிய 75 வயதுடைய முதியவர் ஒருவர் பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியத் தூதுவரிடம் சுமந்திரன் எடுத்துரைத்தார்.

அதுமாத்திரமன்றி இந்திய அகதி முகாம்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்திருப்பது பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனைச் செவிமடுத்த இந்தியத் தூதுவர், மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கு அவசியமான இருப்பிட மற்றும் வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும், இது பற்றி அரசுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...