1118full cristina fernandez de kirchner
உலகம்செய்திகள்

ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி மீது படுகொலை முயற்சி

Share

துப்பாக்கிதாரி ஒருவரால் குறிவைக்கப்பட்ட ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி கிறிஸ்டீனா பெர்னாண்டஸ் டி சிர்ச்னர் படுகொலை முயற்சியில் இருந்து நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

கிறிஸ்டீனா தனது வீட்டுக்கு வெளியில் ஆதரவாளர்களை வரவேற்றிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரது முகத்துக்கு நேரே துப்பாக்கியை நீட்டியுள்ளார்.

அந்தத் துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் இருந்தபோதும் துப்பாக்கிதாரி விசையை அழுத்தவில்லை என்று ஜனாதிபதி அல்பார்டோ பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

கிறிஸ்டீனா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி நீதிமன்றத்தில் இருந்து திரும்பி இருந்தார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

35 வயதான பிரேசில் நாட்டவர் என்று உள்ளூர் ஊடகங்கள் அடையாளப்படுத்தி இருக்கும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் முயற்சிக்கான காரணத்தை கண்டறியும் விசாரணையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (01) நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி பொர்னாண்டஸ், “கிறிஸ்டீனா தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான தொழில்நுட்ப ரீதியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஏனெனில் துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் இருந்தபோதும் சுடப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலை கண்டித்த அவர் இந்தக் கொலை முயற்சி 1983 இல் நாட்டில் ஜனநாயகம் திரும்பிய பின் நிகழ்ந்த மிக மோசமான சம்பவம் என்றும் விபரித்தார்.

ஊழல் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்து வரும் 69 வயதான கிறிஸ்டீனாவுக்கு ஆதரவாக அவரின் வீட்டுக்கு வெளியில் அண்மைக்காலத்தில் மக்கள் திரண்டு வருகின்றனர்.

2007 தொடக்கம் 2015 வரை கிறிஸ்டீனா ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தனது கோட்டையாக உள்ள படகோனியாவில் அரச ஒப்பந்தங்களை மோசடியாக வழங்கியதாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அவர் குற்றங்காணப்பட்டால் 12 ஆண்டுகள் சிறை மற்றும் அரசியலில் ஈடுபட ஆயுள் காலத் தடையும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனினும் அவர் மீது மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அதன் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மாதங்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...