கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார்.
2025 மே 13 அன்று, கனடா தனது வரலாற்றில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புதுமை அமைச்சராக எவன் சாலமனை நியமித்துள்ளது.
ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹாலில் நடைபெற்ற சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் விழாவில், ரொறன்ரோ சென்டர் தொகுதியைச் சேர்ந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினரான சாலமன் பதவியேற்றார்.
பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய அமைச்சகம், கனடாவை செயற்கை நுண்ணறிவில் உலகத் தரத்தில் முன்னிலை வகிக்க வைக்கும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
எவன் சாலமன், செயற்கை நுண்ணறிவு கொள்கை வடிவமைப்பு, தொழில்துறைகளில் AI பயன்பாட்டை ஊக்குவித்தல், மற்றும் தனியுரிமை, பாதுகாப்பு ஆகியவை ஆகியவற்றுக்கு சமநிலை ஏற்படுத்துதல் போன்ற பல முக்கிய பொறுப்புகளை ஏற்கிறார்.
தெற்கு ஒன்ராறியோவின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் பொறுப்பாவார்.
சாலமனின் ஊடக அனுபவம் (CBC மற்றும் CTV-யில்) அவரை ஒரு திறமையான தகவல்தொடர்பாளராக மாற்றியுள்ளது.
மேலும், கனடாவிலேயே AI உள்கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்கள் – குறிப்பாக தரவகுப்பு மையங்கள் மற்றும் அதிவேக தகவல்தொடர்பு வளங்கள் AI துறையில் நாட்டின் பங்களிப்பை பாதுகாக்க உதவுகிறது.
இந்த புதிய அமைச்சகம், தொழில்நுட்பத்தில் கனடாவின் வரலாற்றிலேயே மைல்கல்லாக அமைகிறது.