rus ukr4 2025 11 5c8a31876fa3c026ed6f715c4bcf6c83
உலகம்செய்திகள்

புதினை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை: உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்தார் ட்ரம்ப்!

Share

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் போல ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதினை அமெரிக்கா கைது செய்யுமா என்ற கேள்விக்கு, “அதற்கான அவசியம் இருக்காது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

“ரஷ்ய ஜனாதிபதியைப் பிடிப்பதற்கு அவசியமிருக்காது. புதினுடன் நான் எப்போதும் சிறந்த உறவையே கொண்டுள்ளேன். அவருடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போரைத் தீர்ப்பது எளிது என்று தான் நினைத்ததாகவும், ஆனால் அது இன்னும் முடிவுக்கு வராதது தனக்கு ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 31,000 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய வீரர்கள். ரஷ்யப் பொருளாதாரமும் தற்போது மோசமான நிலையில் உள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா சமீபத்தில் வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை போதைப்பொருள் கடத்தல் புகாரில் கைது செய்ததைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, “சர்வாதிகாரிகள் மீது அமெரிக்கா இதேபோன்ற நடவடிக்கையைத் தொடர வேண்டும்” என மறைமுகமாகப் புதினைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...