அமெரிக்க நாடாளுமன்றம் அருகே ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

அமெரிக்காவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிடத் தொகுதிக்கு அருகில் கூரிய  ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கத்திகள் உட்பட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட
கத்திகளில் சில வொஷிங்டனில் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் ஸ்வஸ்திக் மற்றும் தீவிரவாத கொள்கை சின்னங்கள் வரையப்பட்டுள்ள ஒரு வாகனத்தில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வலதுசாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ள பேரணியில் அமைதியின்மை ஏற்படலாம் எனும் அச்சம் நிலவிவரும் நிலையில் இக் கைதுஇடம்பெற்றுள்ளமை அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

d942c695 e lakcuxiaevfqe 1024x683 1

Exit mobile version