சர்வதேச சுகாதார பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ்: கொவிட் தடுப்பூசிகள் செலுத்தல், முகமூடிகள் அணிதல்‚ மற்றும் இடங்களுக்கான கொவிட் பாஸ்கள் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகள் ஜரோப்பா முழுவதும் கடுமையாக்காவிட்டால் அடுத்த வசந்த காலத்தில் அரை மில்லியன் இறப்புக்கள் பதிவு செய்யபடலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச சுகாதார அமைப்பின் அவதானிப்பின் அடிப்படையில் விதிக்கப்பட்ட அரசின் புதிய கட்டுப்பாடுகள் ஜரோப்பா முழுவதும் எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளன. இதனால் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் நள்ளிரவு முதல் ஆஸ்திரியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளதோடு‚ அத்தியவசியமற்ற கடைகளும் மூடப்பட்டுள்ளன.
#WorldNews
Leave a comment