ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் இனந்தெரியாத நோய்த் தொற்றுக் காரணமாக 89 பேர் உயிரிழந்துள்ளனர்.,
தெற்கு சூடானின் வடக்கு மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்காக்கில் மர்ம நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட மக்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வெள்ளம் காரணமாக வாந்திபேதி ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதிவந்த நிலையில், தற்போது எதிர்மறையான முடிவுகள் தெரியவந்துள்ளதால் புதிய நோய் குறித்து மருத்துவ நிபுணர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
#WorldNews