4 18 scaled
உலகம்செய்திகள்

160 கிலோ மீற்றர் தூரத்தை தூக்கத்திலேயே கடந்த 11 வயது சிறுவன்!

Share

160 கிலோ மீற்றர் தூரத்தை தூக்கத்திலேயே கடந்த 11 வயது சிறுவன்!

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன், தூக்கத்தில் 160 கிலோ மீற்றர் தூரத்தை கடந்த நிகழ்வினை கின்னஸ் அமைப்பு பகிர்ந்துள்ளது.

தூக்கத்தில் நடப்பது என்பது அரிதான நோய் ஆகும். சிலருக்கு இந்த பாதிப்பு இருந்தால் சிறிது தூரம் தன்னை மறந்து நடந்து செல்வர் என்று கூறப்படுகிறது.

36 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த அரிய நிகழ்வு ஒன்றை கின்னஸ் அமைப்பு தற்போது பகிர்ந்துள்ளது.

1987ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி, இண்டியானா மாகாணம் பெருவைச் சேர்ந்த மைக்கேல் டிக்ஸன் என்கிற 11 வயது சிறுவன் தூக்கத்தில் நடந்து சென்றுள்ளார்.

ஆனால் அவர் 160 கிலோமீற்றர் தூரத்தை கடந்துள்ளார். காலில் காலணிகள் இல்லாமல் நடக்க துவங்கிய சிறுவன், வீட்டிற்கு அருகில் சரக்கு ரயிலில் ஏறி வெகு தொலைவிற்கு சென்றுள்ளார்.

ஒரு இடத்தில் இறங்கிய அவர் ரயில் தடத்தில் நடந்து சென்றுள்ளார். இது எதுவும் சிறுவனுக்கு நினைவில் இல்லை.

ரயில்வே ஊழியர்கள் சிறுவன் நடந்து வருவதை கண்ட பின்னர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் சிறுவனின் தாய் அவனை மீட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘இளம் வயதில் தூக்கத்தில் நடக்கின்ற வியாதி இருந்தாலும், குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அந்த வியாதி தாமாகவே மறைந்துவிடும்’ என தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...