ருமேனியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது கஞ்சா பயன்படுத்திய அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ருமேனியாவில் நடைபெற்ற இசை விழா ஒன்றில், மேடையிலேயே கஞ்சா புகைத்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த அமெரிக்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 18 கிராமுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, நீதிமன்றம் அவருக்கு 830 டொலர் அபராதம் விதித்து முதலில் தீர்ப்பளித்தது.
இந்தத் தண்டனை போதுமானதல்ல எனக் கருதிய அரசுத் தரப்பு, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று அவருக்கு 9 மாத கால சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்தது.

