அடையாளம் தெரியாமல் அழிந்துபோன மாகாணம்! பிணவறைகளில் சடல குவியல்
அமெரிக்க மாகாணம் ஹவாயில் காட்டுத்தீயினால் பலியானவர்கள் எண்ணிக்கை 101 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீயில் கருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொபைல் பிணவறைகளில் மெளயி நகரில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஹவாய் தீவில் காட்டுத்தீயினால் மூன்று முக்கிய மாவட்டங்கள் அடையாளம் தெரியாத வகையில் சாம்பலாகியுள்ளது.
தற்போது சடலங்களை அடையாளம் காணும் பொருட்டு, டி.என்.ஏ மாதிரிகளை ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அடையாளம் காணப்படாத சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகள் டி.என்.ஏ சோதனைக்கு அறிவித்துள்ளதுடன், 1,000 பேர் வரையில் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், மாயமாகியுள்ளவர்களை கண்டுபிடிக்க சிறப்பு குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

