உலகம்செய்திகள்

மிகவும் சக்தி வாய்ந்த இராணுவம் : மீண்டும் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா..!

Share
5 9
Share

மனிதவளம், உபகரணங்கள் மற்றும் நிதி ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் ஆயுதப் படைகளை மதிப்பிடும் சமீபத்திய குறியீட்டில் அமெரிக்கா(us) மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

145 நாடுகளை உள்ளடக்கிய இந்தக் குறியீட்டில் ரஷ்யா(russia) இரண்டாவது இடத்திலும், சீனா(china) மூன்றாவது இடத்திலும் உள்ளதாகவும், தெற்காசியாவின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவம் என்ற குறியீட்டில் இந்தியா(india) நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தென் கொரியா(south korea), பிரிட்டன்(uk), பிரான்ஸ்(france), ஜப்பான்(japan), துருக்கி(turkey) மற்றும் இத்தாலி (italy)ஆகியவை முறையே ஐந்தாவது முதல் 10வது இடம் வரை பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் 9வது இடத்தில் இருந்த பாகிஸ்தான்(pakistan) இந்த ஆண்டு குறியீட்டில் 12வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும், வங்கதேசம்(bangladesh) 35வது இடத்திலும்,  இலங்கை(sri lanka) 69வது இடத்திலும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா மோதலில் சிக்கியுள்ள இஸ்ரேல்(israel) 15வது இடத்திலும், ஈரான்(iran) 16வது இடத்திலும், ரஷ்யாவுடன் போரில் சிக்கியுள்ள உக்ரைன்(ukraine) 20வது இடத்திலும், லெபனான் (lebanon)115வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (afghanistan)118வது இடத்திலும் உள்ளன.

Share
Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...