அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்து ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்துள்ளார்.
ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.
இதில் நீதிபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து எல்விஸ் ஷ்கெம்பி, நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரி உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.