ஐபோன்கள் தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்திற்கு குவியும் புகார்கள்
தற்போது ஐபோன்களில் அலாரம் (Alarm) வேலை செய்யவில்லை என்று உலகத்தின் பல மூலையில் இருந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு புகார்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு அலாரம் தொடர்பான புகார்கள் குவிவது இதுதான் முதல் முறை என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது, கடிகார செயலி வேலை செய்யவில்லை என்பதால், அலாரம் அடிக்க வேண்டிய நேரத்தில் ஒலி எழுப்பவில்லை என்று பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணத்தினால் ஐபோன்கள் பயன்படுத்தும் பல பயனர்கள் தாமதமாக எழுந்து அலுவலகம் செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் ஐ ஓஎஸ் அப்டேட் செய்ததும் அலாரம் சரியாகிவிடும் என்றும் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை எனவும் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதேவேளை அலாரம் ஏன் இயங்கவில்லை என்பதற்கான காரணத்தை ஆப்பிள் நிறுவனம் இதுவரை தெரிவிக்காமல் இருப்பது பயனாளிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.