maxresdefault scaled
உலகம்செய்திகள்

நிவாரண உதவி வழங்கும் போது மயங்கி விழுந்த நடிகர் டி.ராஜேந்தர்: அதிர்ச்சி சம்பவம்

Share

நிவாரண உதவி வழங்கும் பொழுது நடிகர் டி.ராஜேந்தர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தனர். வீடுகள், விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.

இன்று நெல்லை மாவட்டத்தில் நடிகர் விஜய் 1,500 பேருக்கு நிவாரண உதவி வழங்கினார். அதேபோல், நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரும் இன்று தூத்துக்குடியில் நிவாரண உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது, திடீரென மயக்கம் அடைந்து சரிந்து விழுந்தார். இதனால், பதற்றமான அவரது ரசிகர்கள், டி.ஆரை அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை மயக்கத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து, அவரை பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர்.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...