3 6 scaled
உலகம்செய்திகள்

சுவிஸ் பள்ளி ஒன்றை திடீரென சுற்றி வளைத்த பொலிசார்: அதிர்ச்சியில் மாணவர்கள்

Share

சுவிஸ் பள்ளி ஒன்றை திடீரென சுற்றி வளைத்த பொலிசார்: அதிர்ச்சியில் மாணவர்கள்

சுவிட்சர்லாந்திலுள்ள தொழிற்பயிற்சிப் பள்ளி ஒன்றை திடீரென பொலிசாரும் தீயணைப்புக் குழுவினரும் சுற்றி வளைத்ததால், மாணவ மாணவியர் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் ஒன்று நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெனீவாவிலுள்ள Carouge என்னுமிடத்திலுள்ள தொழிற்பயிற்சிப் பள்ளி ஒன்றிற்கு நேற்று காலை துப்பாக்கியுடன் ஒருவர் நடமாடுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உடனடியாக, மாணவ மாணவியர் கதவுகளை உட்புறமாக பூட்டிக்கொண்டு பெஞ்ச்களின் கீழே பதுங்கிக்கொண்டனர்.

உடனடியாக ஆயுதம் ஏந்திய பொலிசாரும், தீயணைப்புக் குழுவினரும் பள்ளியை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால், பள்ளியில் மேற்கொண்டதீவிர சோதனையில் யாரும் சிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து, 350 மாணவ மாணவியரும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதிர்ச்சியடைந்த மூன்று மாணவ மாணவியருக்கு மட்டும் மன நல ஆலோசகர்கள் ஆலோசனை அளிக்க வேண்டியதாயிருந்தது.

அது ஒருவேளை போலியான மிரட்டலாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...