மனிதனுக்குப் பன்றியின் இதயத்தைப் பொருத்தி சாதனை (படங்கள்)

மனிதருக்குப் பன்றியின் இதயத்தை பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதயநோயினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மரபணுமாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் அமெரிக்க மருத்தவர்கள் பொருத்தியுள்ளனர். அவர்களது முயற்சி வெற்றியளித்துள்ளது.

Pig heart 01

அமெரிக்கா- மேரிலாண்ட் மருத்துவ பல்கலைகழகத்தில் இடம்பெற்ற இந்த சத்திரகிசிச்சை மூலம் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்துவதற்கான சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகள் முதன்முதலில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த சத்திர சிகிச்சையானது ஒரு திருப்புமுனை சத்திரகிசிச்சை என மருத்துவர் பார்ட்லி கிரிபித் கூறியுள்ளார்.

மேலும் உறுப்பு பற்றாக்குறை பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இந்த விடயமானது வழிசமைத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேரிலாந்தை சேர்ந்த 57 வயது டேவிட் பெனாட் என்பவருக்கே மரபணுமாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது.

பெனெட்டிற்கு பொருத்தப்பட்ட மரபணுமாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வேர்ஜினியாவை சேர்ந்த நிறுவனமொன்று வழங்கியிருந்தது.

சத்திர கிசிச்சை அன்று பன்றியின் இதயத்தை அகற்றிய விசேட குழுவினர் சத்திரசிகிச்சை வரை விசேட சாதனத்தில் வைத்திருந்தனர்.

இதேவேளை பன்றிகள் நீண்டகாலமாக சாத்தியமான மாற்று சிகிச்சைக்கான ஆதாரமாக காணப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Exit mobile version