6 3 scaled
உலகம்செய்திகள்

பக்கத்து வீட்டின் மின்சார ஒயரால் ஏற்பட்ட விபரீதம்: 3 பேர் மரணம்

Share

பக்கத்து வீட்டின் மின்சார ஒயரால் ஏற்பட்ட விபரீதம்: 3 பேர் மரணம்

தமிழக மாவட்டம், கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சித்தன் விளையை சேர்ந்த தம்பதியினர் ராம் மற்றும் சித்ரா. இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் அஸ்வின் என்ற 17 வயது மகனும் உள்ளனர். இதில், ஆதிரா என்பவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், நேற்று கனமழை பெய்து கொண்டிருந்த போது அஸ்வின் வெளியே கடைக்கு பால் வாங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அருகே உள்ள தாமஸ் என்பவரின் வீட்டில் உள்ள மின்சார ஒயர் அறுந்து கிடந்துள்ளது. அதில் இருந்து எதிர்ப்பாராதவிதமாக அஸ்வின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

அப்போது, அவரைக் காப்பாற்ற சென்ற தாய் சித்ரா மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும், அவர்களை இருவரையும் காப்பாற்ற சென்ற ஆதிராவையும் மின்சாரம் தாக்கியது.

இதில், மின்சாரம் தாக்கிய மூவரும் நிகழ்விடத்திலேயே கிடந்துள்ளனர். பின்பு, மழை நின்ற பிறகு அக்கம், பக்கத்தினர் பார்த்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவலறிந்த பொலிசார், மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...