24 6627286ac9383
உலகம்செய்திகள்

இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம்! கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

Share

இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம்! கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரம், இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பில் அபுதாபி நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் நகரில் வசிக்கும் 160க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 92,576 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 14 முக்கிய தலைப்புகளில் கருத்துகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

அதில் வீட்டு வசதி, வேலை வாய்ப்புகள், தனிநபர் மற்றும் குடும்ப வருமானம், சொத்துகள், வேலை குறித்த தகவல்கள், சுகாதாரம், கல்வி, தனித்திறன்கள் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டது.

அதன் முடிவில் 73 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்துடன் செலவழித்த நேரத்தால் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தெரிவித்தனர்.

34.3 சதவீதம் பேர் வருமானத்தில் திருப்தி அடைந்துள்ளதாகவும், அதேபோல் தனிநபர் வருமானத்தில் 64.7 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளதாகவும், 70.6 சதவீதம் பேர் தாங்கள் வசிக்கும் வீடுகள் வசதியாகவும், திருப்திகரமாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பெரும்பாலான மக்கள் இரவில் தனியாக நடக்கும்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு உறுதி செய்தது. இதில் 93.6 சதவீதம் பேர் தங்கள் கருத்துகளை கூறினர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...