பற்றி எரியும் எரிபொருள் தாங்கிகள்: விழுந்தது பயங்கரவாதிகளின் குறி!

Abudabi

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் மேற்கொள்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த பகுதியிலேயே ட்ரோன் மூலம் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும்., இத்தாக்குதலில் 3 எரிபொருள் தாங்கிகள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இடம்பெறும் பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிகிறது என்று கூறப்படும் அதேவேளை இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


#WorldNews

Exit mobile version