images 1
உலகம்செய்திகள்

காதலிப்பதற்கு ஒரு வாரம் விடுமுறை – செமகுஷியில் இளசுகள்!

Share

சீனாவில் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அரசு ஆலோசகர்கள் கொடுத்த ஐடியா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகவும், விவாத பொருளாகவும் மாறி இருக்கிறது.

குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு கல்லூரிகள் தற்போது இந்த பலே ஐடியாவை பின்பற்ற துவங்கியுள்ளன. சீனாவில் செயல்பட்டு வரும் ஒன்பது கல்லூரிகளில் இந்த தேசிய பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில், தடாலடியான திட்டத்தை துவங்கிவிட்டன.

ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சம் ஒரு வாரம் வேண்டுமானாலும் விடுப்பு எடுத்துக் கொண்டு மாணவர்கள் தங்களின் இணையரை கண்டுபிடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் சீனாவின் குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை சமன் செய்ய முடியும். மார்ச் 23 ஆம் தேதி ஃபேன் மெய் கல்வி குழுமம் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுப்பு அளித்துள்ளது.

இந்த ஏழு நாட்கள் விடுப்பு காலம் மாணவர்களை, “இயற்கையை நேசிக்கவும், காதல் வாழ்க்கையை கற்றுக் கொண்டு இலையுதிர் காலத்தில் மகிழ்ச்சியுடன் காதலை கொண்டாடவும்,” ஊக்குவிக்கும். “மாணவர்கள் பசுமையான நீர்நிலைகள், மலைப்பிரதேசங்களுக்கு சென்று, இலையுதிர்கால அமைதியை உணர்வார்கள் என நம்புகிறேன்.

இது மாணவர்களின் மனவோட்டத்தை விரிவுப்படுத்துவதோடு, அவர்களின் உணர்வுகளை ஆழமாக்கி, அவர்கள் வகுப்பறையில் அதிக சிறப்பாக பாடங்களை உள்வாங்க உதவியாக இருக்கும்,” என்று மியான்யங் ஃபிளையிங் கல்லூரி தலைவர் லியாங் குயோஹூய் தெரிவித்து இருக்கிறார்.

ஒருவார கால விடுப்பின் போது மாணவர்கள், டயரி எழுதுவது, தனிநபர் வளர்ச்சி பற்றி குறித்துக் கொள்வது, பயண வீடியோக்களை எடுப்பது போன்றவற்றை வீட்டுப் பாடமாக செய்ய வேண்டும்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...