download 1
உலகம்செய்திகள்

வானில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம், ஏழு பேர் பலி

Share

வானில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம், ஏழு பேர் பலி

பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராஸில் ஏற்பட்ட விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சாவ் பாலோவில் உள்ள காம்பினாஸ் நகரில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் ஒற்றை எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், சுரங்க நகரம் என்று அழைக்கப்படும் இடாபேவா பகுதியில் நடுவானில் வெடித்து சிதறியது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். விமானத்தில் இருந்த 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

முதலில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் விமானத்தின் துண்டுகள் மலையின் ஓரத்தில் உள்ள மரங்கள் மற்றும் புல்வெளி மீது விழுந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். விபத்துக்கான முழு காரணங்கள் இன்னும் தெரியவில்லை.

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...