பழ ஜூஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த எலி! அதிர்ச்சி புகைப்படம்
உலகம்செய்திகள்

பழ ஜூஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த எலி! அதிர்ச்சி புகைப்படம்

Share

பழ ஜூஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த எலி! அதிர்ச்சி புகைப்படம்

இந்திய மாநிலம் தமிழகத்தில் 10 ரூபாய் மாஸா பழ ஜூஸ் பாக்கெட்டில் செத்து போன எலி ஒன்று கிடந்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் பி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிவாசன் மற்றும் நதியா.  இவர்கள் உணவகம் ஒன்றினை நடத்தி வருகிறார்கள்.

இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அப்போது, உணவகத்திற்கு அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் உள்ள 10 ரூபாய் மாஸா ஜூஸ் பாக்கெட்டை இவருடைய மகனும், மகளும் வாங்கி வந்துள்ளனர்.

அப்போது சிறுவன் சரவணன், ஜூஸ் பாக்கெட்டை பிரித்து ஸ்ட்ரா வைத்து குடிக்க தொடங்கியுள்ளார்.

வழக்கத்திற்கு மாறாக ஜூஸ் கசப்பாக இருந்ததால் சிறுவன் பாக்கெட்டை பிரித்து பார்த்துள்ளார். அதில், குட்டி எலி ஒன்று செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் தன் தந்தையிடம் சென்று ஜூஸ் பாக்கெட்டை காண்பித்துள்ளார். பின்பு, தந்தை சீனிவாசன் அதை வீடியோவாக எடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது, மாஸா ஜூஸ் பாக்கெட்டில் இறந்து போன எலி இருந்தது அச்சத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...