முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மாகாராணியை சந்தித்து பேசிய நினைவை முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் 50ஆவது திருமண வருட இரவு விருந்தில் அனைத்து நாட்டுத் தலைவர்கள் சார்பாக தம்பதியரை வாழ்த்திப் பேசும் பொறுப்பு தமக்குக் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் அரச தலைவர்கள் மற்றும் சிறப்புத் தூதுவர்களுக்கு மாண்புமிகு மகாராணி பாரம்பரியமாக நடத்தும் விருந்து நமது ஒன்றியத்தின் தெளிவான அடையாளமாகும். எனவே, அனைத்து பொதுநலவாய நாடுகளின் சார்பாக இன்று மாலை மாண்புமிகு அரசவையில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றதை ஒரு சிறப்புப் பாக்கியமாகக் கருதுகிறேன். என அன்றைய உரையை ஆரம்பிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Scotland November 20, 1997 என்பது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடர்புடைய உரையை நிகழ்த்திய திகதி மற்றும் இடமாகக் காட்டப்பட்டுள்ளது.
#srilanka #world

