BJwCKuRQOalykW7u9IqG 1
இந்தியாஉலகம்செய்திகள்

தாயால் 8 முறை கர்ப்பமடைந்த 16 வயது சிறுமி!

Share

தாயால் 8 முறை கர்ப்பமடைந்த 16 வயது சிறுமி!

தாயின் உதவியுடன் 16 வயது சிறுமி 8 தடவைகள் கர்ப்பமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலது பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் இந்திராணி தம்பதியினர் தமது மகளுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமிக்கு 4 வயது இருக்கும் போதே சரவணன் விபத்தில் சிக்கி உயிரிழக்க இந்திராணி, இரண்டாவதாக சையத் அலி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தாயான இந்திராணியோ அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் அவருக்கு ஒரு கருமுட்டைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

காலங்கள் ஓட சிறுமி 12 வயதை அடைந்த வேளை வளர்ப்பு தந்தையால் பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர் தமது மகள் என்று கூட கருதாது இந்திராணியும் சையத்தும் இணைந்து சிறுமியின் கருமுட்டையை விற்று காசாக்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை விற்பனை செய்துள்ளனர். தமது 16 வயது மகளிற்கு 22 வயது எனவும் பானு மகாலிங்கம் என்ற பெயரில் திருமணமாகிவிட்டதாகவும் பொய் சான்றுகளை சமர்ப்பித்து கருமுட்டைகளை விற்றுள்ளனர்.

இதற்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவர் இடைத் தரகராக செயற்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி அண்மையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார்.

அதையடுத்து தாயார் இந்திராணி அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஈரோட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாதாக தெரியவந்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...