பாகிஸ்தானில் குடும்ப பிரச்சினையால் 9 பேரை சுட்டுக் கொன்ற உறவினர்கள்
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் குடும்ப பிரச்சினையால் 9 பேரை சுட்டுக் கொன்ற உறவினர்கள்

Share

பாகிஸ்தானில் குடும்ப பிரச்சினையால் 9 பேரை சுட்டுக் கொன்ற உறவினர்கள்

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திருமணம் தொடர்பான தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மலகாண்ட் மாவட்டத்தின் பட்கேலா தாலுகாவில் நிகழ்ந்துள்ளது. அவர்களது வீட்டிற்குள் நுழைந்த உறவினர்கள் சிலர் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். திருமண தகராறே இந்த கொடூர கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், மாகாண துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக பத்கேலா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகளை கைது செய்ய மாவட்டத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களும் சீல் வைக்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு காபந்து முதல்வர் முகமது ஆசம் கான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும்” என்று கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...