பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களின் சேவை சுமார் 6 மணி நேரம் முடங்கியதால் அதன் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
மேலும், அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களின் சேவைகள் உலகம் முழுவதும் 6 மணி நேரம் நேற்றிரவு திடீரென முடங்கின.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில்,இதனால் ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஃபேஸ்புக் பங்குகள் மதிப்பு சரிந்ததால்மார்க் ஜுக்கர்பெர்க் கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
இதனால் உலக பணக்காரர்கள் வரிசையில் அவர் 3ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
Leave a comment