11 scaled
உலகம்செய்திகள்

போர் விமானங்களை வாங்கி குவிக்கும் சிங்கப்பூர்!

Share

போர் விமானங்களை வாங்கி குவிக்கும் சிங்கப்பூர்!

சிங்கப்பூரின் வான்படைக்கு புதிதாக எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பினை அவர் நேற்றைய தினம் (28) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நான்கு எஃப்-35பி ரக போர் விமானங்களை வாங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அந்த வகையைச் சேர்ந்த மேலும் எட்டு விமானங்களை வாங்கவிருப்பதாக தற்காப்பு அமைச்சு சென்ற ஆண்டு (2023) மீண்டும் அறிவித்திருந்தது.

வெவ்வேறு ஆற்றல் படைத்த இந்த இரண்டு எஃப்-35 வகை விமானங்களும் ஆகாயப்படையின் செயற்திறனுக்கு வலு சேர்க்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

“மிகுந்த தாங்குதிறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள எஃப்-35ஏ விமானங்கள், செயற்திறன்மிக்க ஆயுதங்களையும் சுமந்துசெல்லும் வல்லமை படைத்தவை. இவை குறுகிய தொலைவில் மேலெழும்பும், செங்குத்தாகத் தரையிறங்கும் ஆற்றல் படைத்தவை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட எஃப்-35 ரக விமானங்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் எஃப்-35ஏ விமானங்களின் விலை குறித்த விவரங்களைத் தற்காப்பு அமைச்சு இன்னும் வெளியிடவில்லை என்றாலும், அண்மைய அமெரிக்கப் புள்ளிவிவரங்களின்படி, அவை ஒவ்வொன்றும் 82.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடையவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல, எஃப்-35 பி ரக போர் விமானத்தின் விலை 109 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
24 6756d8c892f60
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல்: யாழ். எம்.பி. அர்ச்சுனா சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடம் சாட்சியம்!

தனக்கு இழைக்கப்பட்ட சில அநீதிகள் தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முன்னிலையாகி...

25 686e8302c83b7
இலங்கைசெய்திகள்

கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைத்துப்பாக்கி பெற்ற தொழிலதிபர் கைது: 13 தோட்டாக்கள் மீட்பு!

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், மினுவாங்கொடையைச் சேர்ந்த...

GCE Ordinary Level 1
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புகள், கருத்தரங்குகள் நவம்பர் 4 உடன் தடை! தடை உத்தரவு

2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி செயல் அமர்வுகள்,...

Pinnawala 01
இலங்கைசெய்திகள்

பார்வையாளர்கள் வருகையில் சரிவு: ரிதியகம சஃபாரி பூங்கா மற்றும் பின்னவல மிருகக்காட்சி சாலையை மக்கள் புறக்கணிப்பு!

தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றுக்கு அதிகளவிலான பார்வையாளர்கள் வருகை தந்த...