5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

Share

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட அமெரிக்க தயாரிப்பு குண்டு ஒன்றை வீசியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை(30.06.2025) நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் அப்பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டதால் இது ஒரு போர்குற்றமாக கருதப்படுகின்றது.

எனினும், தாக்குதல் நடத்தப்பட முன்னர், வான்வழி கண்காணிப்பைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், நெரிசல் மிகுந்த விடுதியில் இவ்வளவு பெரிய ஆயுதத்தைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெர்ரி சிம்ப்சன் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...