Connect with us

உலகம்

அமெரிக்காவில் கடுமையாகும் விசா விதிமுறைகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published

on

38

அமெரிக்காவில் (United States) விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கும் இந்திய (India) மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்ற நிலையில், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் இந்திய மாணவர்களுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில், விசா காலாவதி ஆன பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், மாணவர் விசா மற்றும் H-1B விசாக்கள் காலாவதியானாலும் நாட்டில் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்படுகின்றன.

இதுகுறித்து குடியேற்ற ஆய்வுகள் மையத்தின் நிபுணரான ஜெசிகா எம்.வாகன் கருத்து தெரிவிக்கையில், “கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் தங்கள் விசா காலாவதியான பிறகும் தங்கியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 இந்திய மாணவர்கள் தங்கள் விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனிநபர்கள் தங்கள் மாணவர் விசாக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவர்கள் கல்வியை முடித்தவுடன் நாட்டைவிட்டு வெளியேறுவதை உறுதி செய்யவும் கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 10 tamilnaadi 10
ஜோதிடம்9 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 01 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.02.2025, குரோதி வருடம் தை மாதம் 19, சனிக் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் : 31 ஜனவரி 2025 – Daily Horoscope

Post Views: 11

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 30 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 30.01.2025, குரோதி வருடம் தை மாதம் 17, வியாழக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் மிருகசீரிடம், புனர்பூசம் சேர்ந்தவர்களுக்குச் சந்திராஷ்டமம்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 29 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 29.01.2025, குரோதி வருடம் தை மாதம் 16, புதன் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் மிருகசீரிடம், திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 28 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 28.01.2025, குரோதி வருடம் தை மாதம் 15, செவ்வாய்க் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 27 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 27.01.2025 குரோதி வருடம் தை மாதம் 14, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள சேர்ந்த கார்த்திகை, ரோகிணி...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 26.01.2025, குரோதி வருடம் தை மாதம் 13 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள சேர்ந்த பரணி, கார்த்திகை...