18 25
உலகம்செய்திகள்

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ளதால் பிரித்தானியாவுக்கு நான்கு பாதிப்புகள்

Share

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ளதால் பிரித்தானியாவுக்கு நான்கு பாதிப்புகள்

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள விடயம் உலக நாடுகள் பலவற்றிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா, மெக்சிகோ, சீனா, ஜேர்மனி என பல நாடுகள் ட்ரம்பின் வரி விதிப்புகளை எதிர்கொள்ள பதற்றத்துடன் காத்திருக்கின்றன.

இந்நிலையில், வரி விதிப்புகள் மட்டுமின்றி, ட்ரம்ப் எடுத்துள்ள சில நடவடிக்கைகளால், பிரித்தானியாவுக்கும் சில பாதிப்புகள் ஏற்பட உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

ட்ரம்ப் பதவியேற்றதும் கையெழுத்திட்ட முதல் ஆவணங்களில் ஒன்று, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்ததாகும்.

ஆக, அமெரிக்கா பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது பிரித்தானியாவை குறைமதிப்புக்கு உட்படுத்துவதற்காக ட்ரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை என்கிறார் சர்வதேச அரசியல் நிபுணரும், லண்டன் பல்கலை பேராசிரியருமான இந்தர்ஜீத் பார்மர்.

அமெரிக்காவுடன் பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHS செய்துகொள்ளும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், மருந்துகள் விலை அதிகரிக்க இருப்பதுடன், தனியார் அமைப்புகள் பல மருத்துவ அமைப்பை கட்டுப்படுத்தும் ஒரு நிலை உருவாகலாம் என்கிறார் பேராசிரியர் பார்மர்.

ராணுவத்துக்காத அதிகம் செலவிடவேண்டுமென ட்ரம்ப் வற்புறுத்துவதால், பிரித்தானியா உக்ரைனுக்கு கூடுதல் நிதி உதவி செய்ய கட்டாயப்படுத்தப்படலாம்.

மேலும், உக்ரைனுக்கான நிதி உதவியை ட்ரம்ப் நிறுத்துவதாலும், பிரித்தானியா உக்ரைனுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கும் நிலை உருவாகலாம்.

அதனால், உள் நாட்டின் தேவைகளுக்காக லேபர் அரசு செலவிட திட்டமிட்டிருந்த நிதி மற்றும் முதலீடுகள் பாதிப்புக்குள்ளாகலாம் என தான் கருதுவதாகத் தெரிவிக்கிறார் Bowdoin பல்கலை பேராசிரியரான Andrew Rudalevige.

சமீபத்தில் பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ், பிரித்தானியாவுக்கு முதலீடுகளைக் கொண்டுவரும் நோக்கில் சீனாவுக்குச் சென்றிருந்ததை சிலர் அறிந்திருக்கலாம்.

ஆக, பிரித்தானியா சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், ட்ரம்ப் சீனாவிடமிருந்து விலகியிருக்க விரும்புவதுபோல் தெரிகிறது.

அத்துடன், அவர் பிரித்தானியாவையும் சீனாவிடமிருந்து விலகியிருக்க வற்புறுத்தலாம் என்றும், தடைகளும் வரிகளும் விதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சீனா பிரித்தானியா உறவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், வரிகள் காரணமாக, ஒரு வர்த்தகப் போர் உருவாகலாம் என்றும், அதற்குள் பிரித்தானியாவும் இழுக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார் பேராசிரியர் Rudalevige.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...