16 20
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு : ஜேர்மனிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி தடை

Share

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு : ஜேர்மனிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி தடை

ஜேர்மனியில் (Germany) கோமாரி நோய் (Foot-and-Mouth) கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜேர்மானிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய பிரித்தானியா (Britain) தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் கோமாரி நோய் பரவுவதைத் தடுக்க ஜேர்மனியிலிருந்து பன்றி இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இந்த நோய் கண்டறியப்படாதாலும், தடுப்பு நடவடிக்கையாக இத்தடை விதிக்கப்படுவதாகவும் இது நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கோமாரி நோய் என்பது மாடுகள், பன்றிகள், ஆடுகள், மீன்கள் மற்றும் இரட்டைச் சொறி கால்களைக் கொண்ட கால்நடைகளில் மிக வேகமாக பரவும் வைரஸ் நோயாகும்.

இது மனிதர்களுக்கு எந்தவித சுகாதார அபாயத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், 2001 இல் பிரித்தானியாவில் ஏற்பட்ட பெரும் பரவல் ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட கால்நடைகளை கொல்ல வழிவகுத்துடன் இது விவசாயிகளின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது, ஜேர்மனி பன்றி இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் சவால்களை சந்தித்து வருகின்றது. பிரித்தானியாவிற்கு ஜேர்மனி மூன்றாவது பெரிய பன்றிக் கறி ஏற்றுமதியாளராகவும் இரண்டாவது பெரிய பால் பொருட்கள் ஏற்றுமதியாளராகவும் உள்ள நிலையிலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை, ஜேர்மனிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...

images
செய்திகள்இலங்கை

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச எழுத்தறிவு

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாவட்டங்களுக்கிடையேயான...

25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...