17 17
உலகம்செய்திகள்

தென் கொரிய ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது: ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடி

Share

தென் கொரிய ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது: ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடி

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சாக் யோல், ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நடந்த நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

கடந்த மாதம் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக யூன் சாக் யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை இரண்டு முறை அவரை கைது செய்ய அதிகாரிகள் முயற்சி செய்திருந்தனர். முதல் முயற்சி அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டது.

சியோல் நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த யூன் சாக் யோல், தான் செய்தது சரியானது என்றும், விசாரணைக்கு தானாக முன்வருவதாகவும் முன்னர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ஊழல் தடுப்புப் பிரிவு அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாததால், இன்று பெரும் பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார்.

தென் கொரியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஜனாதிபதி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தென் கொரிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 67c591bd8956f
இலங்கைசெய்திகள்

கேபிள் கார் திட்டம்: தேவையற்ற தலையீடுகளைத் தடுக்க கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் எழுத்தாணை கட்டளை!

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, இடையூறு செய்வதையோ, தடுக்கும்...

james watson 2
செய்திகள்உலகம்

டிஎன்ஏவின் இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

டிஎன்ஏவின் (DNA) அமைப்பைக் கண்டுபிடித்ததில் முக்கியப் பங்காற்றிய நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ்...

8b112170 d678 11ef 94cb 5f844ceb9e30.jpg
செய்திகள்உலகம்

காசாவில் பணயக் கைதியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை: விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண் பகீர் தகவல்!

காசாவில் பணயக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தற்போது விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப்...

1990535 20
செய்திகள்இலங்கை

தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தையால் சந்தேகம் – 6 மாதக் குழந்தை கொலையா? மறுபிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு!

ஓசூர் பகுதியில் ஆறு மாதக் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக முன்னர்...