உலகம்
பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி
பிரேசிலிய(Brazil) சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒரு நகரத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.
பிரேசிலின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த விமானம் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் மீது மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானம், பிரேசிலிய தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாஸியாவின் விமானம் என்றும்,அவர் தனது குடும்பத்தினருடன் சாவோ பாலோ மாநிலத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 61 வயதான தொழிலதிபர் அவரது மனைவி மூன்று மகள்மார் உட்பட்டவர்கள் பலியாகினர்.