6 3
உலகம்

பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு!

Share

பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு!

உலகின் மிகப் பெரிய மற்றும் முழுமையான டைனோசர் எலும்புக்கூடொன்று பாரிசில் (Paris) ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்த “Vulcain” எனும் டைனோசர் எலும்புக்கூடானது நவம்பர் 16 திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.

இந்த அபூர்வமான எலும்புக்கூடானது, அமெரிக்காவின் வைமிங் மாகாணத்தில் 2018ல் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இது 20.5 மீட்டர் நீளம் கொண்டதாக காணப்படுகின்றது.

Vulcain Late Jurassic Morrison Formation என்ற டைனோசர் பழமையான பூமிச் சட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சவுரோபோட் இன டைனோசர் ஆகும்

இது Apatosaurus மற்றும் Brontosaurus இனங்களின் அம்சங்களைக் கொண்டிருப்பதோடு, Apatosaurus ajax மற்றும் Apatosaurus louisae இனங்களின் இடைநிலை இனமாகக் கருதப்படுகிறது.

Vulcain கடந்த ஜூலை மாதம் முதல் பாரிசின் வெளியே உள்ள Château de Dampierre-en-Yvelines மாளிகையில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.இதனை பார்வையிட 40,000க்கு மேற்பட்ட மக்கள் வந்துள்ளனர்.

பிரான்சில் உள்ள Collin du Bocage மற்றும் Barbarossa என்ற ஏல நிறுவனங்கள் இந்த ஏலத்தை ஏற்பாடு செய்துள்ளதுடன் ஏற்கெனவே பங்கு முன்பதிவில் 11 மில்லியன் முதல் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஏலம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஏலத்தில் வெற்றி பெறும் அந்த நபருக்கு GPS point, அகழாய்வு வரைபடம், osteological map ஆகியவை வழங்கப்படுவதுடன், அதற்கு புதிய பெயர் சூட்டுவதற்கும் உரிமை கிடைக்கும்.

இந்த டைனோசர் எலும்புக்கூடானது கலை உலகிலும் ஏலத்தில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...

european union
உலகம்செய்திகள்

சட்டவிரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் 3 முக்கிய திட்டங்களுக்கு அங்கீகாரம்: உறுப்பு நாடுகளுக்கு €20,000 அபராதம்!

ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளில் சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான மூன்று...

G7qS4PxagAIRuL4
உலகம்செய்திகள்

ஜப்பானில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம்: 40 செ.மீ. சுனாமி அலைகள் பதிவு – மீட்புப் பணிகளுக்குப் பிரதமர் உத்தரவு!

ஜப்பானின் வடக்குக் கடற்கரையில் நேற்று (டிசம்பர் 8) இரவு 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்...