உலகம்
காசாவில் ஹமாஸ் அதிரடி : இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு
வடக்கு காசா பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) நடந்த சண்டையின் போது நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி படுகாயமடைந்தார் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்தன.
வடக்கு காசாவில் சமீபத்திய இஸ்ரேலிய படைத்துறை தாக்குதலின் மையமாக இருந்த ஜபாலியா பகுதியில் நடந்த சண்டையில் இவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் எந்த விவரங்களையும் இஸ்ரேல் வழங்கவில்லை வழங்கவில்லை அத்துடன் சம்பவத்தின் சூழ்நிலைகளை இன்னும் ஆராய்ந்து வருவதாகக் கூறியது.
காசாவில் ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலில் இஸ்ரேலின் பலி எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இந்த மாத தொடக்கத்தில் வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையின் போது காயமடைந்த ஒரு அதிகாரி உயிரிழந்துள்ளதாக திங்கட்கிழமை இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.