9 14
உலகம்செய்திகள்

அமெரிக்க ஆதரவு அரபு நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

Share

அமெரிக்க ஆதரவு அரபு நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் இராணுவத் தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்தான், கட்டார் உள்ளிட்ட எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ஈரானின் எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் இருக்கும் வளைகுடா அரபு நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கும் காட்டும் நாடுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என ஈரான் குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீதும் போரை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் யா இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை ஈரான் ஏவியது.

இதனைத்தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடந்த அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாக சர்வதேச தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...